‘சமுத்திரம்’ ‘ஈரம்’ பட நடிகை சிந்துமேனனின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்து உள்ளீர்களா?.. என்ன ஒரு அழகான குடும்ப புகைப்படம்…

திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் சிந்துமேனன். இவர்  பெங்களூரில் பிறந்தவர்.

   

இவரது குடும்பம் ஒரு மலையாள குடும்பம் இவருக்கு கார்த்திகேயன் என்ற தம்பி உள்ளார். இவர் மலையாள குடும்பத்தைச் சார்ந்தவர் என்றாலும் தமிழ்,தெலுங்கு ,மலையாளம் கன்னடம்  மொழிகளை சரளமாகவும் பேசுவார்.

1994 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான’ ராஷ்மி’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தனது 15 வயதில் கன்னட மியூசிக் சேனல் ஆன்கராக வேலை செய்து வந்தார். இவர் தமிழ் திரை உலகில் ‘சமுத்திரம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இவர் தொடர்ந்து கடல் பூங்கா. யூத் போன்ற பல  சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ,கன்னடம், மலையாளம் ,போன்ற  மொழி படங்களில் நடித்து வந்தார்.

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு தமிழ்  நடித்த  ‘ஈரம்’ படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது .

2010 ஆம் ஆண்டு டொமினிக் பிரபு என்ற லண்டனைச் சார்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் கூட இவர் படங்களில் நடித்து  வந்தார். இவருக்கு இரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். 2012 வரை தெலுங்கு படத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து தன்னை திரையுலகை விட்டு விலக்கிக் கொண்டார்.  தற்போது தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். இவர்களின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது.