‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு இந்த வாரம் வெளியேறும் முக்கிய போட்டியாளர்… இவர் தானா?…. வைரலாகும் தகவல்… வருத்தத்தில் புலம்பும் ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’.  இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும். கொரோனா லாக் டவுன்  சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

   

தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இந்த சீசனில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்திகேயன் பட நடிகை ஆண்ட்ரியான்,

 

ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளார்.

இது ஒரு சமையல் நிகழ்ச்சிதான் என்றாலும் இதில் இடம் பெறும் நகைச்சுவைக்கு அளவே இல்லை. அந்தவகையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஹன்சிகா மோத்வானி பங்குபெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த வாரம்  ‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. போட்டியாளர்களான விஷால் மற்றும் மைம் கோபி இருவரும் இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர்.

இவர்களில் மைம் கோபி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.