என்ன பண்ணி வச்சிருக்கீங்க….. நீங்க இல்லனா வேற யாரும் பண்ண மாட்டாங்களா?…. உங்க காண்ட்ராக்டை க்ளோஸ் பண்ணிடுவேன்….. ரைடு விட்ட மாவட்ட ஆட்சியர்….!!!

மாவட்ட ஆட்சியர் ஒருவர் வீடு கட்டும் கான்ட்ராக்டர் ஒருவரை சரியாக வீடு கட்டவில்லை என்று கூறி ரெய்டு விட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. பொதுவாக ஏழை எளிய மக்களுக்கு வீடு இல்லை என்று கூறக்கூடாது என்பதற்காக அரசாங்க தரப்பில் இருந்தே வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றது. குறைந்த விலையில் வீடு கட்டி கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

   

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த வீட்டையெல்லாம் கட்டுவதற்கு அரசாங்க தரப்பில் இருந்து ஏலம் விடப்படும். அப்போது காண்ட்ராக்டர்கள் ஏலம் எடுத்து வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். ஆனால் ஒரு சில இடங்களில் வீடு மிகவும் மலிவான பொருட்களை வைத்து கட்டுகிறார்கள். இதனால் வீடு கட்டிய சிறிது நாட்களிலேயே வீடு சேதம் அடைந்து விடுகின்றது.

அந்த வகையில் ஒரு மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர் திடீரென்று ரைடு செல்கிறார். அங்கு சென்று வீட்டை பார்த்துவிட்டு இது என்ன இப்படி இருக்கின்றது ஏழைக்கு என்றால் இப்படித்தான் கட்டிக் கொடுப்பீர்களா? உங்களுக்கு வீடு கட்டினால் எப்படி கட்டுவீர்கள் என்று வீடு கட்டும் கான்ட்ராக்டரை சரமாரியாக ரெய்டு விடுகிறார்.

நீங்க இல்லை என்றால் வேறு யாரையும் வைத்து எங்களால் வேலை வாங்க முடியாதா? ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் உங்கள் காண்டாக்ட் மொத்தமாக க்ளோஸ் பண்ணி விடுவேன் என்றும் மிரட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டை தெரிவித்து வருகிறார்கள். இப்படி பல ஊர்களில் நடக்கின்றது. ஆனால் அதனை யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள் என்று கூறி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள் .