கேப்டன் விஜயகாந்த் தனது முதல் திரைப்படத்தில் நடிக்கும் போது எப்படி இருந்தார் தெரியுமா?… பலரும் பார்த்திடாத புகைப்படம் இதோ….

நடிகர் விஜயகாந்த் தனது முதல் திரைப்படத்திற்காக எடுத்துக் கொண்ட போட்டோ சூட் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘கேப்டன்’ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இவருடைய இடத்தை எந்த நடிகராலும் இதுவரை முடியவில்லை.

   

அப்படி தனித்துவமான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது. அப்படி நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதனை எல்லாம் நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.  நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். தற்பொழுது இவர் உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் தனது முதல் திரைப்படத்திற்காக எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் 1976ல் வெளியான ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பினை எஸ் ஏ சி என்பவர் கொடுத்தார். தற்பொழுது நடிகர் விஜயகாந்தின் முதல் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஷூட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த வைரல் புகைப்படம்….