இந்த புகைப்படத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா?… இவர் பிக் பாஸ் பிரபலமா?…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கலந்து கொண்ட முக்கிய போட்டியாளரான விஜே கதிர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் விஜே கதிர்.

   

இவர் விஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை கொண்டு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட விதம் இவருக்கு பல ரசிகர்களை தேடி தந்துள்ளது என்று கூறலாம். முக்கியமாக பெண் ரசிகைகள் தான் அதிகம் உள்ளனர்.

ஒருபுறம் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்ல மற்றொரு புறம் இவரை சமூக வலைத்தளங்களில் ‘மிக்சர் போட்டியாளர்’ என்றும் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரத்தில் பணம் பெட்டி வைக்கப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத விதமாக கதிர் அந்த பணப்பெட்டியுடன் தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்.

அவ்வப்பொழுது சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பிக் பாஸ் பிரபலமான கதிர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…