இந்த வாரம் டபுள் எவிக்சனா?… எவிக்சன் கார்டை எடுத்துக்காட்டும் கமல்… ஷாக்கான போட்டியாளர்கள்…. வெளியான ப்ரோமோ இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்றைய நாளின் முதல் பிரமோ தற்பொழுது  இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது 21 போட்டியாளர்கள் தொடங்கப்பட்டது. வாரம் ஒரு போட்டியாளர் என பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி தற்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.

   

இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் பிரீஸ் டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களின் உறவினர்களும் பாஸ் வீட்டிற்கு வந்து போட்டியாளர்களை மகிழ்வித்தனர். இதைத் தொடர்ந்து இன்றைய நாளுக்கான முதல் பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில் கமல் வந்ததும் எல்லோரும் Happy newyear என்று கூறுகிறார்கள்.அதன் பிறகு ‘சொல்லுங்க யார் வெளியேறப்போறாங்க?’ எனக் கேட்டதும், மணிகண்டன் தான் என்று சிரித்துக்கொண்டே கூறுகின்றார்.இவ்வாறுஇருக்கையில் இந்த newyear அதுவுமா ஏதாவது ஆச்சரியம் நடக்காதா என்று எதிர்பார்த்திட்டு இருக்கிறோம்’ என்று அசீம் கூறுகின்றார்.

‘டபுள் எவிக்சன் பண்ண ஊக்கம் கொடுக்கிறீங்களா?’ என கமல் கேட்கின்றார்.அவ்வாறு கேட்க எல்லோரும் ஷாக்காகின்றனர்.அதன் பிறகு தன்னுடைய எவிக்சன் கார்டை எடுத்துக் காட்டுகின்றார் கமல். இவ்வாறு இன்றைய நாளின் முதல் பிரமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….