‘சூப்பர் சிங்கர்’ செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியின் மகன் மற்றும் மகளை பாத்துருக்கீங்களா?… இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்க்காத அல்லது கேள்வி படாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு உலகில் தமிழர்கள் மத்தியில் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் இருந்து வருகிறது.

   

‘தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்’ என்ற ஸ்லோகனுடன் தொடங்கி சிறியவர்களுக்கான சூப்பர் சிங்கர் ஜூனியர், பெரியோர்களுக்கு சூப்பர் சிங்கர் சீனியர் என இரண்டு பிரிவாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் தான் செந்தில் குமார் ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி மக்களின் மனதை கொள்ளையடித்தனர்.

அவர்கள் பாடும் நாட்டுப்புறப்பாடல்கள் அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. தற்சமயம் ராஜலட்சுமி பாடிய புஷ்பா பட பாடல் ஒலிக்காத இடமே இல்லை. அந்த அளவிற்கு இது மக்கள் மத்தியில் பிரபலமானது.

இவர்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடித்ததில் இருந்து ரொம்பவே பிஸியாக காணப்படுகின்றனர். தனியார் நிகழ்ச்சிகளுக்கு செல்வது, வெளிநாட்டில் கச்சேரி நடத்துவது என இருக்கின்றனர்.

தற்போது செந்தில்-ராஜலட்சுமி தங்களது மகன் மற்றும் மகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘குழந்தைகள் இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களே’ என்று ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த அழகிய குடும்ப புகைப்படம்….