‘அம்மன்’ திரைப்படத்தில் நடித்த வில்லன் நடிகர் இறந்துவிட்டாரா?… இறப்பதற்கு முன் எப்படி இருந்தார் தெரியுமா?… புகைப்படம் இதோ…

‘அம்மன்’ திரைப்பட வில்லன் நடிகர் ராமி ரெட்டியின் இறுதிக்கால வாழ்க்கை தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ராமிரெட்டி. இவர் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவ.ர் ஹைதராபாத்தில் ஜர்னலிசம் படித்தவர். தனியார் கல்லூரி ஒன்றில் ப்ரொபஷராக பணியாற்றி வந்தார்.  இருப்பினும் இவருடைய ஆசை எல்லாம் சினிமாவின் மீதுதான் இருந்தது .

   

எப்படியாவது சினிமாவில் நடித்துவிட வேண்டும் என்று சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கியவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் தெலுங்கு படமான ‘அனுக்சா’. இத்திரைப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் மிகப் பிரபலமானார். இதைத்தொடர்ந்து இவர் தமிழில் ‘அம்மன்’ திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.

இத்திரைப்படத்தில் ‘ஜண்டா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து வந்த அனைத்து சாமி திரைப்படங்களுக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் படம் தயாரிக்க எண்ணி இவர் தயாரித்த படங்களை எல்லாம் சரியாக ஓடவில்லை. இதனால் பெரும் நஷ்டம் அடைந்தார்.

ஒரு தெலுங்கு படத்தில் சாய் பாபாவாக கூட நடித்திருப்பார். மிகுந்த பண கஷ்டத்தில் தள்ளப்பட்ட இவரால் மீளவே முடியவில்லை. நடிகர் ராமி ரெட்டி தனது இறுதி  கட்டத்தில் மிகவும் ஒல்லியாக ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறினார். ஆனால் இவர் தற்பொழுது உயிரோடு இல்லை 2011 இல் தனது 52 வது வயதில் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டார்.