‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மணிமேகலை… இது தான் காரணமா?… அவரே கூறிய தகவல்… ஷாக்கான ரசிகர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’.  இந்த ஷோவின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே ஆகும். கொரோனா லாக் டவுன்  சமயத்தில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.

   

தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இந்த சீசனில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்திகேயன் பட நடிகை ஆண்ட்ரியான்,

ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

தற்பொழுது வரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரே ஒரு போட்டியாளர் தான் எலிமினேட் ஆகி உள்ளார். கடந்த வாரம் எலிமிநேஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுவர்கள் கடைசி நேரத்தில் எலிமினேஷன் இல்லை என கூறி எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

இந்நிலையில் கோமாளியாக கலக்கி வந்த மணிமேகலை திடீரென இந்த ஷோவை விட்டு வெளியேறுவதாக கூறி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தார். இவர் ஏன் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்பதை பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் இன்று மணிமேகலை புது ஷூட்டிங் ஒன்றில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். அது என்ன ஷூட்டிங் என்கிற விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘இதற்காகத்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு மணிமேகலை விலகினாரா?’ என்று கமெண்டுகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்…