
தமிழ் சினிமாவில் 1980களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ரேவதி. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் விஜயகாந்த், கார்த்தி, பிரபு போன்றோருடன் சேர்ந்து நடித்து பிரபலமானார். மண்வாசனை, மௌனராகம், தேவர் மகன், புதுமை பெண் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தனது சிறப்பான நடிப்பின் மூலம் ஐந்து முறை பிலிம் பார் விருதை பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த ‘நவரசா ஆந்தாலஜி’ சீரிஸில் கூட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நடிகை ரேவதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. விஜயகாந்த், கவுண்டமணி, செந்தில், ராதாரவி, வடிவுக்கரசி, கோவைசரளா ஆகியோர் நடிப்பில் ஆர்.சுந்தராஜன் இயக்கத்தில் 1984ல் வெளியானது “வைதேகி காத்திருந்தாள்” திரைப்படம்.
இப்படத்திற்கு இளையராஜாவின் இசை கூடுதல் சிறப்பை கொடுத்தது. இரண்டு காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் அமைந்திருக்கும். இத்திரைப்படம் விஜயகாந்திற்கும் ரேவதிக்கும் நல்ல ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது.
இந்த நிலையில் ரேவதியின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த பிரபல பாடகி பற்றிய தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை. பிரபல கிராமிய பின்னனி பாடகரான புஷ்பவனம் குப்புசாமியின் மனைவியும், பாடகியுமான அனிதா குப்புசாமி தான்.
இப்படத்தில் நடிக்க அனிதா குப்புசாமியின் அப்பாவிடம் கேட்ட போது அவர் மறுத்தினால், இக்கதாபாத்திரம் அவரது கையை விட்டு நழுவியுள்ளது. தற்பொழுது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.