ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறிய மணிமேகலை… ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு வெளியேற இதுதான் காரணமா?… அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம் உள்ளே…

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களை  கவர்ந்தவர் மணிமேகலை.

   

விஜே மணிமேகலை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

விஜே மணிமேகலை நடன இயக்குனரான காதல் ஹுசைன் என்பவரை காதலித்து வந்தநிலையில் இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்கள் கடந்த 2017 டிசம்பர் 6ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானார் மணிமேகலை.

28 வயதான மணிமேகலை திருப்பூரில் பிறந்தவர். தனது முதுகலை பட்டப்படிப்பை சென்னையில் பயின்றவர்.

நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இணைந்தார்.

மணிமேகலையும் அவரது கணவரும் இணைந்து நடத்தி வரும் யூட்யூப் சேனலுக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சமீபத்தில் இவர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியை விட்டு காரணம் எதுவும் தெரிவிக்காமல் திடீரென்று விலகினார்.

அவர் விலகியதற்கான காரணம் தெரியாததால்  அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் சண்டை என பல வதந்திகள் பரவின.

இந்நிலையில் மணிமேகலை தனது இணையதள பக்கத்தில் கணவர் ஹுசைனுடன் நிலத்திற்கு பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அத்தோடு அதில் ‘HM பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளால் கடின உழைப்புடனும் எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்குகிறோம்.

கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். கனவு காணுங்கள்’ என பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)