‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையை தொடர்ந்து கர்ப்பமாகிய மற்றொரு நடிகை… அட இவரா?… இந்த ட்விஸ்ட நாங்க எதிர்பார்க்கலையே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தை பற்றி அழகாக எடுத்துரைக்கின்றனர். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், அன்பு ,பாசம் என அனைத்தையும் இந்த சீரியல் காட்டி வருவதால் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறலாம்.

இந்த சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என டாக்டர் ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்பொழுது அதே டாக்டரே முல்லை கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

அத்தோடு தற்பொழுது இந்த சீரியலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர் நடத்திய சாப்பாட்டுக்கடையில் ஏற்பட்ட பிரச்சனையையும் தனம் கண்டுபிடித்து சரிசெய்து விட்டார். இதைத்தொடர்ந்து அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் முல்லையைத் தொடர்ந்து கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும் கர்ப்பமாகி விட்டதாக சொல்லப்படுகின்றது. இதனால் அடுத்தடுத்து என்னென்ன திருப்பங்கள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.