‘தல 62’ திரைப்படத்தில் களமிறங்கும் பிரபல சீரியல் நடிகை… யார் தெரியுமா?… குஷியில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ‘துணிவு’ படத்தை கொடுத்த அஜித் அடுத்து தனது 62வது படத்தை இயக்குவதில் தாமதம் காட்டி வருகிறார். காரணம் கதையோடு படத்தில் இடம்பெறும் அனைத்து விஷயங்களும் எப்படி வரப்போகிறது என்பதை முழுமையாக படித்துவிட்டு படப்பிடிப்பு செல்ல முடிவு எடுத்துள்ளதால் தாமதம் ஆகிறதாம்.

   

இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைவார் என்று பார்த்தால் அவர்களது கூட்டணி அமையவில்லை. அடுத்து மகிழ் திருமேனியுடன் நடிகர் அஜித் படம் நடிக்கிறார் என கூறப்படும் நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக செய்தி வரவில்லை. பைக் சுற்றுலா, படப்பிடிப்பு என பிஸியாகவே தன்னை வைத்துக் கொள்ளும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது.

நடிகர் அஜித் தற்பொழுது வரை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் மட்டும் தான்  உறுதியாகியுள்ளது. இந்நிலையில் ஜீ தமிழ் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல் நடிகை தல 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

ஆம் அவர் வேறு யாரும் இல்லை ‘வலிமை’ திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் சிறிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்த சைத்ரா ரெட்டி தான். இவர் தற்பொழுது மீண்டும் தல 62 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது நமக்கு தெரியவில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.