‘லியோ’ திரைப்படத்தில் தளபதியின் லுக் இது தானா?… செம மாஸா இருக்கே… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் உள்ளே…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.  தற்பொழுது தளபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

   

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இவர்களது வெற்றி கூட்டணி தற்பொழுது மீண்டும் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பில் சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம், மிஷ்கின் , அர்ஜுன், மன்சூர் அலிகான், அபிராமி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் ஆயுத பூஜையையொட்டி மார்ச் மாதம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் தற்பொழுது இணைந்துள்ளார். தற்பொழுது இது தொடர்பான வீடியோவை பட குழுவினர் ரிலீஸ் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சஞ்சய் தத் இறங்கியது, படக்குழுவினர் அவரை வரவேற்றது ,பின்னர் ஹோட்டல் விஜய் லோகேஷ் பேசுவது போன்ற காட்சிகளும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவில் விஜய் லியோ படலுக்கில் உள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘செம மாஸாக உள்ளாரே’ தளபதி  கமெண்ட் செய்து வருகின்றனர்.