முதன்முறையாக Dj black உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த சூப்பர் சிங்கர் பூஜா… அப்புடின்னா அந்த விஷயம் உண்மைதானா?…  கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர்.

   

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர். மேலும் வெள்ளித்திரையில், சினிமா பிரபலங்களுக்கு அடுத்தபடியாக பலரும் பிரபலமாக காரணமாக இருப்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி தான். ஏனென்றால், சிவகார்த்திகேயன் என்ற மாஸ் ஹீரோ விஜய் டிவியில் இருந்து தான் உருவாகியுள்ளார்.

செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமே பிரபலமாகியுள்ளனர். தொடர்ந்து சினிமாவில் பின்னணி பாடல்கள் பாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியடைய காரணம் ஒன்று தான். ஒவ்வொரு சீசனிற்கும் பாடல் நிகழ்ச்சி என்றாலும் வித்தியாசம் காட்டி ஒளிபரப்பு செய்கின்றனர்.

இந்த சீசனில் ஹைலைட்டாக பார்க்கப்படுவது பூஜா என்ற போட்டியாளருக்கு Dj black போடும் பாடல்கள் தான். அது மக்களிடைய நல்ல வரவேற்பு பெற கடந்த வாரம் பூஜாவின் உறவினர்களை வைத்து ஒரு Prank வேறு செய்தார்கள்.தற்போது பூஜா முதன்முறையாக Dj black உடன் எடுத்த புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by V Pooja (@v___pooja)