2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப் 10 தமிழ் படங்கள்..!!

தமிழ் சினிமாவில் 2024-ல் அதிக எதிர்பார்ப்போடு வெளிவரவுள்ள 10 தரமான படங்கள் என்னென்ன? என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.

THE GOAT

முதல் இடத்தில் தளபதியின் THE GOAT படம் உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT) தன் அரசியல் எண்ட்ரியை சமீபத்தில் அறிவித்த விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது. அரசியல் வருகையால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

   

venkat prabhu goat movie

தங்கலான்

இரண்டாம் இடத்தில் விக்ரமின் தங்கலான் படம் உள்ளது . இப்படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். கோலார் தங்க வயலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பா.ரஞ்சித் இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘தங்கலான்’. எப்போதும் ஒரு கதைக்காக அதிகம் மெனக்கெடும் நடிகர் விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பிறகு, இப்படத்திற்காக தனது உடலை அதிகம் வருத்தி 28 கிலோ வரை எடை குறைத்து நடித்துள்ளார்.

தக் லைப்

மூன்றாம் இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படம் உள்ளது . நாயகன் திரைப்படத்திற்குப் பிறகு கமல்-மணிரத்னம் கைக்கோர்த்துள்ள தமிழ்த் திரைப்படம் ஆகும். மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இந்தத் திரைப்படத்தில் ஒன்றாக பணிபுரிகின்றனர். இந்தத் திரைப்படம் கமலின் 234வது திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தில், த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வேட்டையன்

நான்காம் இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் உள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ரானா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

vettaiyan movie poster rajinikanth vettaiyan movie vettaiyan new poster - ரஜினிகாந்த் வேட்டையன் பட போஸ்டர் | பொழுதுபோக்கு News, Times Now Tamil

விடாமுயற்சி

ஐந்தாம் இடத்தில் அஜித்தின் விடாமுயற்சி உள்ளது. நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத்  இசையமைக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக படக்குழுவினரும் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.

‘இந்தியன் 2

ஆறாம் இடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் உள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

கங்குவா

ஏழாம் இடத்தில் சூர்யாவின் கங்குவா படம் உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடிக்க, இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் நடித்து வருகின்றனர். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஒன்றாக இணைந்து தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

ராயன்

எட்டாம் இடத்தில் தனுஷின் ராயன் படம் உள்ளது. நடிகர் தனுஷின் இயக்கத்தில் டி50 படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ராயன் என்று டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது.

Director Dhanush revealed Actor Saravanans character poster today

அமரன்

ஒன்பதாம் இடத்தில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் உள்ளது.சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகும் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் இப்படத்தை தயாரிக்க ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறாக இப்படம் உருவாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தின் டைட்டில் டீஸர் வெளியீடு!

STR48

பத்தாம் இடத்தில சிம்புவின் STR48 படம் உள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்தடுத்து வெந்து தணிந்தது காடு, மாநாடு மற்றும் பத்து தல என அடுத்தடுத்த வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்த படங்களை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்தில் கமிட் ஆகியுள்ளார் சிம்பு. இந்த படத்தில் வில்லன் மற்றும் ஹீரோ என இருவேறு கெட்டப்புகளில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு கேரக்டர் திருநங்கை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எரியும் நெருப்பில் மிரட்டும் லுக் - சிம்புவின் 'எஸ்டிஆர்48' தோற்றம் எப்படி? | simbu starrer str48 poster released by kamal haasan - hindutamil.in