ரட்சிதா வீட்டிற்கு சர்ப்ரைசாக சென்ற பிக் பாஸ் ஷிவின்….. நினைவுகளாக பகிர்ந்த புகைப்படங்கள்….. உங்களுக்காக இதோ…

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த சீசன் கடந்த ஐந்து சீசன்களைப் போலவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

   

இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் முதலில் களமிறங்கிய நிலையில் சிவின், அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் மூன்று பேர் பைனலுக்கு சென்றனர். இதில் அசீம் வெற்றி பெற்றதாக கமலஹாசன் அறிவித்தார்.

இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்தார்கள். இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து அனைவரும் தற்போது வெளியேறி ஷிவினுக்கு ஒரு சர்ப்ரைஸ் வர வாய்ப்பு ஒன்றைக் கூட கொடுத்திருந்தனர்.

அதாவது நடிகை ரட்சிதா பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஷிவினுடன் மிகச்சிறந்த நண்பராக பழகி வந்தார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போது கூட அவரை கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டு சில நிமிடங்கள் அழுதார்.

அது மட்டும் இல்லாமல் ரட்சிதாவின் தாயார் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபோது ஷிவினை தனது இன்னொரு மகள் என தெரிவித்திருந்தார்.

இப்படி பல தருணங்களில் ஷிவின் மற்றும் ரட்சிதா ஆகியோரின் நட்பு பலரையும் மனமுருக வைத்தது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சிவினுடன் நட்பை தொடர்ந்த ரட்சிதா அவருக்கு மாலை மரியாதை உடன் வரவேற்பு வழங்கி மெய்சிலிர்க்க வைத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஷிவின் ரக்ஷிதா அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.