அன்பான குடும்பம், அழகான மனைவி, செல்லமான 2 பிள்ளைகள்…. அருண் விஜய்யின் க்யூட்டான குடும்ப புகைப்படங்கள் இதோ…

தென்னிந்திய திரைப்பட நடிகரான விஜயகுமார் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.

   

தற்போது இவர் சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நாட்டுச்சாலை என்ற கிராமத்தில் பிறந்த இவருக்கு முத்து கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரு மனைவிகள் உள்ளன.

மகள்கள் கவிதா, அனிதா, மகன் அருண் விஜய் ஆகியோர் முதல் மனைவி பிள்ளைகள்.

அடுத்து மகள்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள்.

இவர்களில் நான்கு பேர் சினிமாவில் இருக்கின்றனர்.

இருவர் மட்டும் சினிமா பக்கம் வரவில்லை.

இவரின் மகன் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களில் ஒருவராக அருண் விஜய் தற்போது மாறியுள்ளார்.

அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

சில வருடங்கள் தமிழ் சினிமாவில் பின்தங்கி இருந்த அருண் விஜய் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

தற்போது இவர் அச்சம் என்பது இல்லையே என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.