‘அருந்ததி’ படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறாங்க தெரியுமா?… வளர்ந்து ஹீரோயின் போல மாறிட்டாங்களே.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகை அனுஷ்காவிற்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் ‘அருந்ததி’. இந்த திரைப்படத்தில் தனது திறமையான நடிப்பாலும், மிரட்டலான தோற்றத்தாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

   

‘அருந்ததி’ திரைப்படத்தில் குட்டி அனுஷ்காகாவாக நடித்து பிரபலமானவர் நடிகை திவ்யா நாகேஷ். இவர் மும்பையில் பிறந்தவர். தனது சிறு வயதிலேயே சென்னையில் வந்து செட்டில் ஆனார். திருச்சியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு சென்னையில் படிக்கும் பொழுது அண்ணனுடன் கிரிக்கெட் கோச்சிங் சென்றுள்ளார்.

ஒரு நாள் காய்ச்சல் ஏற்பட்டதால் மைதானத்தில் அமர்ந்துள்ளார் நடிகை திவ்யா நாகேஷ். அப்பொழுது அங்கு தெலுங்கு சீரியல் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்ததாம். திவ்யாவை பார்த்த தெலுங்கு சீரியல் இயக்குனர் ‘நடிக்க சம்மதமா?’ என கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திவ்யா தனது பெற்றோரிடமும் சம்மதம் வாங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் தெலுங்கு மற்றும் தமிழ் விளம்பர படங்களில் நடித்து வந்தார். அதன் பின்பு தமிழில் ‘அந்நியன்’ படத்தில் விக்ரமுக்கு தங்கையாக நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் அது ஒரு கனாக்காலம், ஜில்லுனு ஒரு காதல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக மட்டும் நடிகை திவ்யா 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்ற எதிர்பார்த்த நிலையில் சரியான படவாய்ப்புக்கள் அமையாததால் திரைத்துறையில் இருந்து சிறிது காலம் விலகியுள்ளார். தமிழில் கடைசியாக ‘தேடினேன்’ என்ற திரைப்படத்திலும், தெலுங்கில் ‘வாஸ்தவம்’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் நடிகை திவ்யா.

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அருந்ததி படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரமா இவர்?’ என்று ஆச்சரியத்துடன் கமென்ட் செய்து வருகின்றனர்.