மாமனாரும், மருமகனும் சேர்ந்து செய்யுற வேலையை பாருங்க… வம்பை விலைக்கு வாங்குறாங்களே…!

நடிகர் தனுஷ் படப்பிடிப்பு சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்றது. அப்போது, அங்கு பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய சாலையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மறியலில் ஈடுபடும் அளவிற்கு பிரச்சனை பெரிதாகி விட்டதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

   

மேலும், அவர் கூறியதாவது, மருமகன் ஒரு புறம் இப்படி இருக்க அவரின் மாமனார் மற்றொரு புறம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவார் போல தெரிகிறது என்று கூறியிருக்கிறார். அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்க இருக்கிறது.

வழக்கமாக ஹைதராபாத்தில் நடக்க வேண்டிய படப்பிடிப்புகள் ராமோஜி ஸ்டுடியோவில் தான் நடைபெறும். ஆனால் இந்த படப்பிடிப்பை பொதுமக்கள் அதிகம் செல்லக்கூடிய சாலைகளில் தான் படமாக்க இருக்கிறார்கள். எனவே அவராலும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.