காலம் போன கடைசியில் திருமணம் செய்து கொண்ட நடிகைகள் யார் யார் தெரியுமா?…. இதோ முழு விவரம்…

பொதுவாக சினிமாவில் நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும், திருமணம் செய்து விவாகரத்து பெறுவதும், 40 வயதிற்கு மேல் திருமணம் செய்வது என அனைத்துமே சாதாரணம்தான். 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் பல நடிகைகள் உள்ளனர். அதே சமயம் 40 வயதை கடந்தும் திருமணம் செய்த நடிகைகளும் இருக்கின்றன. அப்படி 40 வயதை கலந்த திருமணம் செய்த நடிகைகள் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

நடிகை ஊர்வசி:

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் ஊர்வசி. இவர் நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞர், தொலைக்காட்சி தொகுப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக திகழ்ந்தவர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு பிரபல மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன்என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகள் இருந்தார்.

கருத்து வேறுபாடு காரணமாக 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு சிவ பிரசாத் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அப்போது ஊர்வசிக்கு 50 வயது.

நடிகை சீதா:

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான சீதா 1990 ஆம் ஆண்டு நடிகர் பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார். புதியபாதை என்ற திரைப்படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

அதன் பிறகு சீதா 2010 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். இவர் இரண்டாம் திருமணம் செய்யும்போது சீதாவிற்கு 40 வயது கடந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகை அம்பிகா:

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் அம்பிகா. தமிழ் மட்டுமல்லாமல் பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்த அம்பிகா 1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ஷினு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ராம் கேசவ் மற்றும் ரிஷிகேசவ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு அவரது கணவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதே வருடமே பிரேம்குமார் என்பவரை மறுமணம் செய்து கொண்ட நிலையில் 1996 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு சீரியல் நடிகர் ரவிகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு வருடங்களில் அவரையும் விவாகரத்து செய்து தெரிந்துவிட்டார். இவர் மூன்றாவது திருமணம் செய்யும்போது இவருக்கு 40 வயது கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகை வனிதா விஜயகுமார்:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்ந்த வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர். ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெ ராஜன் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கும் ஒரு மகள் இருந்தனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்ட நிலையில் 2013 ஆம் ஆண்டு டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.

அதன் பிறகு அவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவரையும் பிரிந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவரையும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அப்போது வனிதா 40 வயதை கடந்து விட்டார்.

சுகாசினி முலாய்:

இவர் தனது காதலை மிக தாமதமாகத்தான் கண்டு கொண்டார். இவர் அதுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட போது இவருக்கு வயது 60. அதே சமயம் இதுதான் இவரின் முதல் திருமணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை ஊர்மிளா:

ஊர்மிளா தன்னுடைய 42 வயதில் தொழிலதிபர் மற்றும் மாடலான மொஹ்சின் அக்தர் என்பவரை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதே ஊர்மிளா புற்றுநோய் உடன் போராடி அதிலிருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ரீத்தி ஜிந்தா:

பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் தனது 41 வயதில் ப்ரீத்தி ஜெனி குட்எனஃப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிக கோலாகலமாக நடைபெற்றது.

நடிகை நயன்தாரா:

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா பிரபுதேவாவுடன் காதலில் இருந்து அதன் பிறகு பிரிந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார்.

அதன் பிறகு இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர். அதேசமயம் நயன்தாரா விக்னேஷ் இவனை திருமணம் செய்து கொள்ளும்போது அவருக்கு வயது 38.

நடிகை காஜல் அகர்வால்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் தனது தங்கை திருமணம் செய்து கொண்ட பிறகு 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளனர். அப்போது காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகும்.