திருந்தவேமாட்டாங்க.. தமிழ்நாட்டு ஹீரோக்களை வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை.. என்ன சொல்லிருக்காரு பாருங்க.!

தற்போது தமிழ் திரையுலகின் டாப் நடிகர்கள் வழக்கமாக கேங்ஸ்டர் திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்கள் என்ற விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. டாப் நடிகர்களாக இருப்பதால், அவர்களின் திரைப்படங்கள் வசூலில் சக்கை போடு போட்டு விடுகிறது. எனினும், கதையை பார்த்தால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக எதுவும் இல்லை.

   

வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் மட்டுமே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். டாப் நடிகராக வலம் வரும் கதாநாயகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கதையம்சம் உள்ள திரைப்படங்களிலேயே நடித்து சலிக்க வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் நடித்து வரும் குபேரா திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தன் எக்ஸ் தள பக்கத்தில் கலாய்த்துள்ளார். அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, தமிழ்நாட்டு ஹீரோக்கள் திருந்த வாய்ப்பே இல்ல. டான், கேங்ஸ்டார், ஹார்பர், போதை பொருள் கடத்தல் என்று குறிப்பிட்டு குபேரா திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார்.